பயிலரங்கில், மத்திய அறிவியல் துறையின் தேசிய கடற்கரை ஆய்வு மைய திட்ட விஞ்ஞானி ருக்மினி சேகர் பேசினார். பயிலரங்கில் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் மற்றும் கொள்ளுக்காடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர் குழுக்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்பசுக்கள் மீன்பிடி வலையில் சிக்கியதால், அவற்றை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில், வனச்சரக அலுவலர்கள் ஏ. எஸ். சந்திரசேகரன் (பட்டுக்கோட்டை), ரஞ்சித் (தஞ்சாவூர்), கடலோரப் பாதுகாப்புக் குழும டிஎஸ்பி முருகன், ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், வனத்துறை அலுவலர்கள், மீனவர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு