தஞ்சாவூர் கீழவாசலில் கட்டப்பட்டு வரும் புதிய மீன் மார்க்கெட் கடைகளுக்கு ரூ. மூன்று லட்சம் வைப்புத்தொகை மற்றும் ரூ. 15,000 மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வியாபாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்ட நிலையில், இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.