இந்நிலையில், அவசரத் தேவைக்காக, ராஜேந்திரன் தனது முதலீடு பணத்தில் இருந்து, 6.75 லட்சம் ரூபாயை எடுத்து விட்டார். பிறகு, கடந்த 2024 ஆகஸ்ட் 18 ஆம் தேதி, ராஜேந்திரன் நிதி நிறுவனத்தில் உள்ள, மீதம் 22 லட்சம் ரூபாயை ராஜசேகரிடம் கேட்டுள்ளார். அப்போது ராஜசேகர் பணத்தை தர மறுத்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து பலமுறை ராஜேந்திரன் பணத்தை கேட்டும், ராஜசேகர் தரவில்லை. இது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, ராஜேந்திரன், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கரூரில் மறைந்திருந்த ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 கிலோ சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.261 உயர்வு!