தஞ்சாவூரில் கோட்டாட்சியர் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் வெளிப்படை தன்மையுடன் பயிர் அறுவடை சோதனை நடத்தவும், விஏஓ வேலை நிறுத்தம் காரணமாக நெல் விற்பனையில் ஏற்படும் சிரமங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிடி பிரிவாய்க்கால்களை முறையாக தூர்வாரவும் வலியுறுத்தினர். கூட்டத்தில் ரவிச்சந்தர், அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.