தஞ்சாவூர்: விபத்தில் சிக்கிய இளைஞருக்கு அரசு உதவ கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள மாங்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசுரேஷ் (29) என்பவர் திருநாகேஸ்வரம் அருகே விபத்தில் சிக்கினார். விபத்தை ஏற்படுத்திய டாடா ஏசி வாகன ஓட்டுநரை கைது செய்து, வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், விபத்தில் சிக்கிய சுரேஷின் மருத்துவச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி