ஜனவரி 9-ஆம் தேதி, தஞ்சாவூரைச் சேர்ந்த 32 வயது பொறியாளருக்கு இணையவழி வர்த்தகம் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பி ஒரு குழுவில் இணைந்த அவர், மர்ம நபர்களின் வங்கிக்கு முதலில் ரூ. 50,000 அனுப்பியுள்ளார். லாபம் கிடைத்ததால் உற்சாகமடைந்து, மொத்தம் 7 தவணைகளில் ரூ. 15.57 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர், லாபத் தொகையை எடுக்க முடியாததாலும், செயலி முடக்கப்பட்டதாலும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து தஞ்சாவூர் சைபர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.