தஞ்சை: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் போக்சோவில் கைது

தஞ்சை அருகே எட்டு வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை அருகே வல்லம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் (வயது 70). சம்பவ தினத்தில் அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்ததில், முதியவர் அஸ்லம் கான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி ஆனது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அஸ்லம் கானை கைது செய்து செவ்வாய்க்கிழமை இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி