தஞ்சாவூரில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐ. ஏ. எஸ், ஐ. பி. எஸ் உள்ளிட்ட உயர்பதவிகளில் சட்டரீதியான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் அமர்சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தி. க பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி