திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று (மே 17) இரவு தஞ்சாவூர் வந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தஞ்சையிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று (திங்கள்கிழமை) மேல வஸ்தா சாவடி அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர், திருச்சி வழியாக விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.