தஞ்சையில் டிச. 27 மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் டிச. 27 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. 

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து, ஒப்புதல் பெற்று, பின்னர் அளிக்க வேண்டும். எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி