கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் பெயரில் கட்சி தொடங்கி, கட்சியை ஒன்றிணைப்பதாகக் கூறியவர்கள் தற்போது திமுகவின் ஏஜென்ட்களாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். வீட்டில் இருந்தவர்கள் திடீரென கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்துவதாகவும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதாதான் தெய்வம், ஆட்சி வேண்டும், கட்சியை ஒன்றிணைப்போம் என கூறியவர்கள் திமுகவின் ஏஜென்ட்களாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருவதாகவும் தினகரன் தெரிவித்தார்.