தஞ்சை: டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் 130 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு ரூ. 1.5 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரொக்கப் பரிவர்த்தனைக்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் பிஓஎஸ் இயந்திரங்கள் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் வழங்கப்பட்டன. 

மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பணத்திற்கு பதிலாக, ஸ்கேன் செய்து டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுகிறது. ஆனால், 25 சதவீத அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்ய வேண்டும். 

இல்லையெனில், பணியிட மாற்றம் செய்ய நேரிடும், கடைகளில் திடீர் ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பணியாளர்களை மிரட்டும் தொனியில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள், நாள்தோறும் ஊழியர்களுக்கு அவர்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அதிகாரிகளின் இந்த நிர்பந்தத்தால் ஊழியர்கள் மனவேதனையும், விரக்தியும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி