கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதைக் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நாளை (மே 31) மேகதாது பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக இன்று காலை தஞ்சை பெரிய கோயில் முன்புள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாகனப் பேரணியாகப் புறப்பட்டனர். இப்பேரணி திருச்சி, சேலம், தர்மபுரி வழியாக ஓசூர் சென்றடைந்து, அங்கிருந்து நாளை மேகதாது பகுதியைச் சென்றடைய உள்ளது.