தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளன. பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தமிழக அரசு லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி பொதுச்செயலாளர் சி. சந்திரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.