ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. அமர்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். எஸ். பழநிமாணிக்கம், திருவையாறு எம். எல். ஏ துரை. சந்திரசேகரன் மற்றும் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நீட் தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதால் அதை ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.