கபாடியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரருக்கு பாராட்டு

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி ஏற்பாட்டில், பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபாடி போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் வென்ற வடுவூர் எம். அபினேஷ்சுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கபாடி அணியின் பயிற்சியாளர் காசி பாஸ்கரன், முன்னாள் வீரர் சேரலாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாராட்டினர். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் MLA, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி