நமது முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியபோதெல்லாம் நிராகரித்து விட்டனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்த மூன்று மணி நேரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த அரசை பாராட்ட மனமில்லாமல், குறை சொல்பவர்களின் மனநிலை தான் குறையாக உள்ளது தவிர, அரசு, காவல்துறை செயல்பாடு சிறப்பாக உள்ளது. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்டவர் தி.மு.க வைச் சேர்ந்தவர் என்று கூறுவது தவறான செய்தி. எது நடந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் பிறவிக் குணம். மூன்று மாதங்கள் அமைதியாக இருந்த தமிழகத்தில், மீண்டும் தனது குணத்தை அண்ணாமலை காட்டி வருகிறார்.