தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்தும், டெல்லியில் போராடிய சி.பி.எம். தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் தஞ்சை ரயிலடியில் புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. செந்தில்குமார், ஆர். கலைச்செல்வி, என். சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி