தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை, அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் ரூபாய் 56.41 கோடி செலவில் 125 அடி உயர மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாட்டினார். சோழனின் அருங்காட்சியகத்தின் மாதிரி படத்தினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி