தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 11 முதல் தொடங்குகின்றன. இதையொட்டி, 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். இத்தேர்வுகள் காலை 9 முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் இருவேளைகளில் நடத்தப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தலைமையாசிரியரிடம் கடிதம் அளித்து தேர்வில் இருந்து விலக்கு பெறலாம். தேர்வு முடிந்த பின் மதிப்பெண் பட்டியல்களை மார்ச் 2-க்குள் சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.