மின் கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறக்கோரி தஞ்சாவூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத் தியுள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு மின்சார சட்டத் திருத்தம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலர் ஆர். பி. முத்துக்குமரன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் முத்து. உத்திராபதி, மாவட்டத் துணைச் செயலர் கோ. சக்திவேல், பொருளாளர் கோ. பாஸ்கர், மாவட்டநிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி. சந்திர குமார், சி. பக்கிரிசாமி, பா. பாலசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். இராமச்சந்திரன், மாவட்டச் செயலர் சோ. பாஸ்கர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரெ. கோவிந்தராசு, மாதர் சங்க மாவட்டச் செயலர் ம. விஜயலட்சுமி, மாவட்டத் தலைவர் கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி