தென்காசி மாவட்டம் நெட்டூரில் பட்டியலின மக்கள் திருமண வீட்டிற்குள் புகுந்து 6 பேர் வெட்டப்பட்ட கொடூர சாதிய வன்கொடுமையைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச்செயலாளர் பி. செந்தில்குமார், தீஒமு மாநில செயலாளர் ஆர். கலைச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலம் முழுவதும் தொடரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.