சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், திமுக மாவட்டச் செயலாளர் சு. கல்யாணசுந்தரம், மாநகரச் செயலாளர் சு.ப. தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதே போல் தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். அவர்களை விடுதலை செய்யக் கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த இரு வழக்குகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் திமுக மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த வழக்குகள் அனைத்தும் கும்பகோணம் நீதிமன்றத்திலிருந்து, தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை நீதிபதி விசாரணை செய்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, குற்றச்சாட்டு அரசு தரப்பிலிருந்து நிரூபிக்கப்படாததால் மேற்கண்ட வழக்குகளில் தொடர்புடைய அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நேற்று தீர்ப்பளித்தார்.