பட்டுக்கோட்டை கொசுத் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி 1 லட்சம் மக்கள் தொகையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது நகர்களும் உருவாகி விரிவடைந்து வருகிறது. புதிய பேருந்து நிலையமும், புதிய மார்க்கெட்டும் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும், புறநகர் பகுதிகள் பழைய
நிலையிலேயே தான் உள்ளன. புறநகர் பகுதிகளில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும், காலி மனைகளில் கருவேல மரங்களும், முள் செடிகளும், புதர்களும் வளர்ந்து பாம்பு, விஷப்பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துகள் சுற்றித்திரிகின்றன.

ஏற்கனவே இருந்த நகராட்சி ஆணையர், காலியாக உள்ள வீட்டுமனைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும், புதர்களையும் அகற்றி
கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ரூ. 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் படும் என்று அறிவித்தார். அந்த பணி பாதியிலேயே நின்று விட்டது.
பல தெருக்களில் மின் கம்பங்கள் நடப்பட்டும் இது வரை மின் இணைப்பு வழங் கப்படவில்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. பொதுவாக 33 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :