பிரதமர் மோடி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்.
கல்வி, மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும். சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினால்தான், பின்தங்கிய வகுப்பினரின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் உரிய ஒதுக்கீடுகளை வழங்க முடியும். மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் கொலையை பாஜக அரசியலாக்கி வருகிறது. டெல்லியில் பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போராட்டம் நடத்தியவர்களை பாஜகவினர் கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.