தஞ்சை: உயிரி உரம், நுண்ணூட்ட சத்துக்கள் 50 சதவீத மானியத்தில் பெறலாம்

தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைநீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேசியது: மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான குறுவை பருவத்தில் 78 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் நடவுபணி முடிவடைந்துள்ளது. அதில் 19 ஆயிரத்து 15 ஏக்கர் பரப்பில் இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு குறுவை பருவத்துக்கு தேவையான நெல் ரகங்கள் 211 மெட்ரிக் டன் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 8 ஆயிரத்து 150 ஏக்கர் பரப்பில் உளுந்து மற்றும் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் எள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடை மழையினால் ஆயிரத்து 557 ஏக்கர் பரப்பில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆண்டுக்கான சம்பா தாளடி பருவத்திற்கு 216 கிராமங்களுக்கு ரூ.44 கோடியே லட்சம் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கிராமங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இயந்திர நடவு பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. உயிரி உரம், நுண்ணுயிர் உரங்கள் மற்றும் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றார். வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், தமிழ்நங்கை முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி