பைக் மோதல் ஒருவர் காயம் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

தஞ்சை விளாரை சேர்ந்த கர்ணன் மகன் புவனேஸ்வரன்(27) இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருவையாறு வந்துவிட்டு கல்யாணபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டையை சேர்ந்த ரவி மகன் அமரேஷ்குமார்(23) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்டியூரிலிருந்து திருவையாறு நோக்கி வைத்தியநாதன்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார்.

நடுக்கடை மெயின்ரோட்டில் வரும்போது எதிர்பாரதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிளிலும் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் புவனேஸ்வரன் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். அமரேஷ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்மந்தமாக இறந்துபோன புவனேஸ்வரன் தந்தை கர்ணன்(51) கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

தொடர்புடைய செய்தி