தஞ்சாவூரில் ஏடிஎம் மோசடி: வாலிபர் கைது

ஜனவரி 30-ஆம் தேதி, தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ராமநாதன் (70) என்ற முதியவர் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது, சரவணகுமார் (31) என்பவர் உதவி செய்வது போல் நடித்து, முதியவரின் ஏடிஎம் கார்டை மாற்றி, அவரிடம் வேறு கார்டைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார். பின்னர், முதியவரின் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரத்தை சரவணகுமார் எடுத்துள்ளார். முதியவரின் புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சரவணகுமாரைக் கைது செய்து, அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி