தஞ்சை: பாம்பு கடித்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த உதவி ஆய்வாளர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி நித்யஸ்ரீயை பாம்பு கடித்தது. உடனடியாக அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜ கண்ணன் சிறுமியை தனது இரு சக்கர வாகனத்தில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவல் ஆய்வாளரின் இந்த துரித நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்தி