தஞ்சை நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி காவலர்கள் பாதுகாப்பு

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் துப்பாக்கியுடன் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி நீதிமன்ற வாயில் அருகே கடந்த வாரம் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களின் வாயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன்படி, தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கியுடன் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணி திங்கள்கிழமை தொடங்கியதைத் தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் சந்தேகத்துக்குரிய வகையில் கொண்டுவரப்பட்ட உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டு உள்ளே அனுமதித்தனர். இதேபோல, மாவட்டத்திலுள்ள வட்டநீதிமன்றங்களிலும் துப்பாக்கியுடன் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி