பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு சிசிடிவி பொருத்த அறிவுரை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற கிராம கண்காணிப்பு குழு கூட்டத்தில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கிப் பேசினார். கிராமங்களில் திருட்டைத் தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பொது இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி