இதன் மூலம் 9,200 கர்ப்பிணி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் 16 வட்டாரங்களிலும், 1,749 அங்கன்வாடி மையங்களிலும் நடைபெற்றது. பதிவு செய்யப்பட்டு இணை உணவு பெற்று பயன் அடையும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தாம்பூழம் தட்டுடன் கூடிய பூமாலை, வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், காப்பரிசி, மற்றும் வேப்பம் காப்பு வழங்கப்பட்டது. இவற்றுடன் அனைவருக்கும் மதிய உணவு வகைகளாக எலும்பிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல், புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் ஆகியவை வழங்கப்பட்டன என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி