தஞ்சை: வழிமறித்து பணம் பறிக்க முயற்சி; 4 பேர் கைது

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (26). இவர், நேற்று முன்தினம் (ஜனவரி 27) வடக்கு வாசல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் தாங்கள் வைத்திருந்த பேனா கத்தியை காட்டி தியாகராஜனை மிரட்டி அவரிடம் இருந்து செல்போன், பணத்தை பறிக்க முயற்சி செய்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த 4 பேரையும் பிடித்து தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். 

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த 4 பேரும் தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த ரகுபிரசாத் (20), ராமநாதபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி (26), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி (21), தனுஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி