பஞ்சாபில் இருந்து தஞ்சைக்கு 3, 300 டன் கோதுமை வருகை

தமிழக பொது விநியோகத் திட்டத்திற்காக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து 3,300 டன் கோதுமை நேற்று சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. 50 வேகன்களில் வந்த இந்த கோதுமை மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த கோதுமை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி