சத்தீஸ்கரில் இருந்து தஞ்சைக்கு 2, 750 டன் புழுங்கல் அரிசி

தஞ்சையில் விளைவிக்கப்படும் முப்போக நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மத்திய தொகுப்பில் இருந்தும் தஞ்சைக்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை அனுப்பி வைக்கப்படும். 

அதன்படி நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 42 வேகன்களில் 2, 750 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் தஞ்சை வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. பின்னர் இந்த அரிசி மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி