மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு 2, 700 டன் கோதுமை வருகை

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2,700 டன் கோதுமை, 58 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு வந்துள்ளது. இந்த கோதுமை மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து தேவைக்கேற்ப தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி