தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட 2,500 டன் அரிசி, பொது விநியோகத் திட்டத்திற்காக கன்னியாகுமரிக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிசி மூட்டைகள் 42 வேகன்களில் கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டன. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.