தஞ்சை: 650 நெல் மூட்டைகளுடன் 2 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூர் அருகே முறையான ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட 650 நெல் மூட்டைகளையும், அவற்றை ஏற்றி வந்த 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நுகர்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளர் டி. இளங்கோவன் தலைமையிலான குழுவினர் இந்தப் பறிமுதலைச் செய்து, மூட்டைகளை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பி வைத்தனர். முறைகேடான முறையில் நெல் மூட்டைகள் வருவது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி