தஞ்சாவூா்: காணாமல்போன 15 கைப்பேசிகள் மீட்பு

தஞ்சாவூா் அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகள் தொடா்பாக காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதைத்தொடா்ந்து, வல்லம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் கைப்பேசிகளின் ஐ. எம். இ. ஐ. எண்களைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், 15 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இவை உரியவா்களிடம் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஒப்படைத்தனா்.

தொடர்புடைய செய்தி