தஞ்சாவூருக்கு 1, 380 டன் உர மூட்டைகள் வருகை

ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 23 பெட்டிகளில் 1,380 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் தொடங்கியுள்ளதால், இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன. இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி