டெல்டா குறுவை சாகுபடிக்காக 1228 டன் யூரியா உரம் தஞ்சை வருகை

குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் வினியோகிக்க ரயில் வேகன்களில் 1228 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகள் தஞ்சைக்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இப்போது வரை குறுவை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்துக்கு தேவையான உரங்களான யூரியா 11840 மெட்ரிக் டன், டிஏபி 1747 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1837 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4042 மெட் ரிக்டன், சூப்பர் பாஸ்பேட் 580 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் சில் லரை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தஞ்சை மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் யூரியர் 1228 மெட் ரிக் டன் சென்னையில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தஞ்சைக்கு வந்தடைந் தது. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் அரியலூருக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. இத்தகவலை வேளாண் இணை இயக்குனர் வித்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி