பேராவூரணி அருகே குருவிக்கரம்பையைச் சேர்ந்த மிதுன்குமார் (30) என்பவர், கடைவீதியில் நிறுத்தியிருந்த தனது காருக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நீண்ட நேரமாக கார் என்ஜின் ஓடிக்கொண்டிருந்ததைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.