பேராவூரணி அருகே பூக்கொல்லையைச் சேர்ந்த ராஜ்மோகன் (39) என்பவர், சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்த நிலையில், சகோதரியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காலகம் - ஆவுடையார்கோவில் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற போலீஸார், ராஜ்மோகன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.