தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய வட்டார வள மையம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பகல் நேர பராமரிப்பு மைய குழந்தைகள் மற்றும் அருகாமைப் பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்கள் பங்கேற்றனர். இசை நாற்காலி, கனியும் கரண்டியும், வண்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.