வாக்காளர் தீவிர திருத்த முகாம்: எம்எல்ஏ ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் தீவிர திருத்த முகாம்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குகளை புதிதாக பதிவு செய்ய நவம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் மல்லிப்பட்டினம், சம்பை பட்டினம், செந்தலைவயல், ஆவணம் பெரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைவரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி