தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23) மற்றும் ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (23) ஆகியோர் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பியபோது, பேராவூரணி அருகே அம்மணிசத்திரம் பகுதியில் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெளிநாட்டில் இருந்து 20 நாட்களுக்கு முன்புதான் கோகுல்ராஜ் ஊர் திரும்பியிருந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சேதுபாவாசத்திரம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.