பட்டுக்கோட்டை அருகே ஏரிப்புறகரையைச் சேர்ந்த மீனவர் காளிமுத்து, நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக இடி தாக்கி உயிரிழந்தார். கோடை மழையின் போது பலத்த சத்தத்துடன் விழுந்த இடிக்கு இரையான அவரது உடல், மீன்பிடி வலையிலேயே சிக்கிக்கிடந்த கோரக் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.