திருச்சிற்றம்பலம்: மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே சித்துக்காடு முனியாண்டி தெருவில் வசிக்கும் கார்மேகம் (40) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில், கார்மேகம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்மேகத்தை கைது செய்து, அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி