பேராவூரணியில் வெளியிடப்பட்ட அந்த 2 நூல்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் எழுதிய 'வேளாண்மை ஒரு வாழ்வியல்' மற்றும் 'கடவுள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அரங்க. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பாரத் கல்விக் குழுமத் தலைவர் புனிதா கணேசன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி ஆகியோர் நூல்களை வெளியிட்டனர். ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வெ. நீலகண்டன் சிறப்புரையாற்றினார். எம். எல். ஏ நா. அசோக்குமார் உட்படப் பல முக்கியப் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி