வரத்து வாய்க்காலை சொந்தச் செலவில் தூர் வாரித்தந்த எம்எல்ஏ..

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிக்குளம் சுமார் 15 ஆண்டுகளாக தூர்ந்து போனதால் பாசன வசதி இன்றி தவித்தது. வரத்து வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டதும், காலப்போக்கில் தூர்ந்து போனதும் இதற்குக் காரணம். பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமாரிடம் முறையிட்டதையடுத்து, அவர் தனது சொந்தச் செலவில் வாய்க்காலை தூர்வாரித் தந்துள்ளார். இதனால், கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் மூலம் குளத்திற்கு தண்ணீர் வந்து பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி